|
|
Tamil-kavidai - Sleep song, தாலாட்டு
| Sleep song |
|
|
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தலாட்டு ஆகும்.
பட்டுப் பாப்பா தூங்கு!-நீ
பாலும் குடித்தாய் தூங்கு!
மொட்டில் மணக்கும் முல்லை!-என்
முத்தே என்ன தொல்லை?
சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்.
பிட்டும் தருவேன் தூங்கு!-என்
பெண்ணே கண்ணே தூங்கு!
|
| Tamil-kavidai - தாலாட்டு |
| The topic on Tamil-kavidai - Sleep song is posted by - Malu |
Hope you have enjoyed, Tamil-kavidai - Sleep song . Thanks for your time.
|
|